அழகான படர்ந்த ஆலமரம். ஆனால் அதன் அருமை அதற்கு தெரியாமல் அடர்ந்து விட்டது. அவ்வாறே மானிட குலமும், உன்னை நீ நேசி அப்போதே உன்னை நீ அறிவாய். அவ்வாறே நானும் என்னை அறியாமல் இவ்வளவு நாளாக வாழ்ந்து விட்டேன். இளம் எழில் கொஞ்சும் இலங்கை திரு நாட்டில் எப்படி சொல்லுவது என் பிறப்பிடத்தினை அவ்வளவு அழகும் அருமையும் நிறைத்த அனுமன் வந்து சென்ற மறம் மானம் நிறைத்த மலையகத்தின் மகுடமான நுவரெலிய மண்ணில் வெள்ளையர் வேதமாக கொண்ட வலபனை வைரத்தில் அன்னை மாரியாய் சிவம் ஆகியோரின் அன்பு மகன் சன்முகபிரியன் நான்.பிறப்பு என்பது பிறவிக்கு எப்படியோ அவ்வாறே தாய் மொழி என்பது தரனில் பிறந்தோருக்கு இருபினும் இதில் தமிழனாக தமிழ் மொழியை கொண்டு பிறப்பதற்கு பெரும் தவம் செய்ய வேண்டும் அந்த பாக்கியத்தை அடியான் நான் பெற்றேன் ஆகையால் பெருமையுடன் நான் இதை எழுதுகிறேன்.
இந்த "Peoples for peoples " எனும் பகுதியில் அதாவது "மக்களுக்காக மக்கள்" அறிய பல பழைமையும் புதுமையும் நிறைத்த தகவல்களை தருவதற்காக நான் காத்திருக்கிறேன். நீங்களும் இதில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
உண்மையில் நான் மொழியில் ஏழ்மை எனை விட திறமை நிறைத்த எத்தனியோ இளம் சிங்கங்கள் இருக்கீர்கள். ஆகையால் அப்படியே இருந்துவிடாமல் நம் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது இவ் உலகில். ஊமையாய் உதடுகள் திறந்து வெற்றிகாண்போம் இந்த மக்களுக்காக மக்கள் பகுதின் ஊடக .......................................